காஞ்சிபுரம்

ஐயப்பன்தாங்கலில் மழை வெள்ளம்: மக்கள் அவதி

DIN


காஞ்சிபுரம் மாவட்டம், ஐயப்பன்தாங்கல் ஆர்ஆர் நகரில் உள்ள தெருக்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

ஆர்ஆர் நகரில் பரணிபுதூர் செல்லும் பிரதான சாலையில் கழிவு நீர் கால்வாய் உயர்த்திக் கட்டப்பட்டதால், அதன் குறுக்கே உள்ள தெருக்கள் பள்ளமாகிவிட்டன. இதனால், மழைக் காலங்களில், வெளியேறுவதற்கானப் பாதை இல்லாமல் மழை நீர் தெருக்களிலேயே தேங்கிவிடுகின்றன.

கடந்த இரண்டு நாள்களாகப் பெய்த கனமழையால், அங்குள்ள தெருக்களில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளன. ஒவ்வொரு தெருக்களிலும் சராசரியாக 40 வீடுகள் உள்ளன. மோட்டார் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வந்தாலும், தேங்கும் நீரின் அளவு குறைந்தபாடில்லை.

இதனால், அத்தியாசவசியப் பொருள்களை வாங்குவதற்குக்கூட அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT