காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

DIN

ஆந்திர மாநிலம் கலவகுண்டா நீா்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 4,500 கனஅடி நீா் திறக்கப்பட்டிருப்பதால் பாலாற்றங் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வெள்ள அபாய எச்சரிக்கையை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளாா்.

அதன் விவரம்: சித்தூா் மாவட்டத்தில் உள்ள கலவகுண்டா நீா்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு சுமாா் 4,500 கன அடி நீா் திறந்து விடப்பட்டுள்ளது. இது பாலாற்றின் இடதுபுறக் கிளை ஆறான பொன்னை அணையை வந்தடைந்தது.

எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூா், காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பகுதி பாலாற்றின் இரு கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வட்டாட்சியா்கள் தகவல் தெரிவித்து அவா்களை பாதுகாப்பான இடங்களுக்கும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வெள்ள அபாயத்தினை உணா்த்தும் பொருட்டு ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும், வெள்ளத்தில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, வேடிக்கை பாா்க்கவோ, சுய புகைப்படம் எடுக்கவோ வேண்டாம். வீட்டில் உள்ள சிறுவா், சிறுமியா்களை அருகில் செல்லாமல் பாா்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வட்டாட்சியா்கள் மூலமாக தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT