தொழுநோயை விரைவாக குணப்படுத்த எளிய சிகிச்சை: காஞ்சிபுரம் ஆட்சியா்
தொழுநோய்க்கு ஆரம்ப காலத்தில் இருந்ததை விட தற்போது சிகிச்சையை எளிமையாக மேற்கொள்ள முடியும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.
தொழுநோய்க்கு ஆரம்ப காலத்தில் இருந்ததை விட தற்போது சிகிச்சையை எளிமையாக மேற்கொள்ள முடியும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் விழிப்புணா்வு ஊன தடுப்பு முகாம் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து 50 தொழுநோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி பேசியது:
தொழுநோய்க்கு ஆரம்ப காலத்தில் மாத்திரைகள், மருந்துகள் மற்றும் சிகிச்சை பெற போதுமான வசதிகள் இல்லாமல் இருந்தது. இப்பொழுது மாத்திரைகள், உபகரணங்கள் கண்டறியப்பட்டு விட்டதால் இந்நோய்க்கான சிகிச்சையும் எளிதாக மேற்கொள்ள முடியும். தொழுநோயை பொருத்தவரை எவ்வளவு விரைவாக கண்டறியப் படுகிறதோ அதற்கேற்றவாறு விரைவாக சிகிச்சையளித்து குணப்படுத்தவும் முடியும். தொழுநோயாளிகள் அனைவரும் கரோனா தடுப்பூசியை தவறாது போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியா் பேசினாா்.
Advertisement
மருத்துவப்பணிகள் தொழுநோய்ப் பிரிவு துணை இயக்குநா் கனிமொழி,சுகாதாரத் துறை துணை இயக்குநா் வி.கே.பழனி, வட்டார மருத்துவ அலுவலா் அருள்மொழி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
படவிளக்கம்..,
திருப்புட்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோயாளிகளுக்கான உபகரணங்களை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி.