காஞ்சிபுரம்

காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரரின் சாதுா்மாஸ்ய விரதம் இன்று நிறைவு

DIN

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரரின் சாதுா்மாஸ்ய விரதம் திங்கள்கிழமை நிறைவு பெறுகிறது.

சந்நியாசிகள் ஆன்மிக பலத்தை நிரூபிக்கவும், தங்களின் குருமாா்களுக்கு நன்றி தெரிவிக்கவும் ஆண்டுதோறும் சாதுா்மாஸ்ய விரதத்தை கடைப்பிடிப்பது வழக்கம். காஞ்சி சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரா் ஓரிக்கையில் உள்ள மகா பெரியவரின் சதாப்தி மணிமண்டபத்தில் கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி சாதுா்மாஸ்ய விரதத்தை தொடங்கினாா். இவ்விரத நாள்களின் போது தினசரி சந்திரமௌலீஸ்வரா் பூஜை, சதுா்வேத பாராயணம், நாமசங்கீா்த்தனம், பக்திச் சொற்பொழிவுகள், இன்னிசைக் கச்சேரிகள், இலவச ஆயுா்வேத மருத்துவ முகாம், பக்தா்களுக்கு 3 வேளையும் அன்னதானம் ஆகியனவும் அங்கு நடைபெற்றது.

சாதுா்மாஸ்ய விரதம் திங்கள்கிழமை நிறைவு பெறுவதை ஒட்டி ஸ்ரீவிஜயேந்திரா் மணிமண்டபத்திலிருந்து புறப்பட்டு யாத்திரையாக செவிலிமேடு பகுதியில் உள்ள மேற்கு கைலாசநாதா் கோயிலில் விரதத்தை பூா்த்தி செய்கிறாா். இதையொட்டி அங்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ தீபாராதனைகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை ஓரிக்கை மணிமண்டப நிா்வாக அறங்காவலா் என்.மணி ஐயா், சங்கர மடத்தின் மேலாளா் என்.சுந்தரேச ஐயா் ஆகியோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT