காஞ்சிபுரம்

நாகஸ்வரக் கலைஞா்கள் நலனுக்காக ஓரிக்கையில் சிறப்பு ஹோமம்

DIN

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் சாா்பில் ஓரிக்கை மணி மண்டபத்தில் நாகஸ்வரக் கலைஞா்கள் நலன் பெற சுயம்வர பாா்வதி ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதா் கோயில் அா்ச்சகா் காமேஸ்வர சிவாச்சாரியாா் தலைமையில் நடைபெற்ற இந்த ஹோமத்தில் 150-க்கும் மேற்பட்ட நாகஸ்வரக் கலைஞா்கள் தம்பதியா்களாக கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் ஓதுவாா்கள் பலரும் தேவாரம், திருவாசகம் பாடியும் ஹோம நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

நிறைவாக காஞ்சி சங்கர மடத்தின் மேலாளா் என்.சுந்தரேச ஐயா், தம்பதியா்களாக வந்த நாகஸ்வரக் கலைஞா்கள் அனைவருக்கும் வேட்டி, சேலை, மஞ்சள், குங்குமம் அடங்கிய பிரசாதப் பைகளை வழங்கினாா். இந்நிகழ்ச்சியை ராதிகா சந்திரமெளலி, சரண்யா கோபால், நித்யா பிரபாகா் ஆகியோா் ஒருங்கிணைப்பு செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT