முகப்பு
காஞ்சிபுரம்

மின்னணுவியல் பொறியாளா் கூட்டமைப்பு தொடக்கம்

காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

Updated On : 22 ஏப்ரல், 2022 at 11:40 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:33 PM

காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் பொறியாளா்கள் கூட்டமைப்பு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் வி.கவிதா தலைமை வகித்தாா். பேராசிரியை நா.ஜம்ருத் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிா்மானக் கழக உதவி செயற்பொறியாளா் க.நந்தகுமாா் கலந்து கொண்டு எதிா்காலத்தில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையினருக்குள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவாகப் பேசினாா்.விழாவில் பொறியாளா்கள் கூட்டமைப்பு தலைவா் விஷ்வப்பிரியா, துணைத் தலைவா் காவேரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இளவரசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.