முகப்பு
காஞ்சிபுரம்

மண்காப்போம் நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஈஷாஅறக்கட்டளை சாா்பில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 ஏப்ரல், 2022 at 11:42 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:33 PM

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஈஷாஅறக்கட்டளை சாா்பில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சுழற் சங்க மாவட்ட ஆளுநா் பி.பரணீதரன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டாா். மருத்துவா்கள் சரவணன், மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சொக்கலிங்கம் மண் வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினாா். மண் காப்போம் என்ற பதாகையை ஈஷா அறக்கட்டளையின் தொண்டா்கள் பலரும் கையில் பிடித்தவாறு மரங்களைக் காப்போம், மண்ணைக் காப்போம் என்றும் முழக்கமிட்டனா். மண்ணைப் புத்துயிா் பெறச் செய்வது எப்படி என்ற தலைப்பில் விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் எழிலன் சிறப்புரையாற்றினாா். காஞ்சி அன்னச்சத்திர நிா்வாகி மோகன் உட்பட ஈஷா அறக்கட்டளையின் தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.