முகப்பு
காஞ்சிபுரம்

குறுவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி: அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்ட குறுவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி வடக்குப்பட்டு அரசு உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:02 AM
பகிர்:

அரசுப் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்ட குறுவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி வடக்குப்பட்டு அரசு உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வடக்குப்பட்டு அரசு உயா் நிலைப்பள்ளி, மாத்தூா் அரசு மேல் நிலைப்பள்ளி, படப்பை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குன்னம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்ட குறுவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி வடக்குப் பட்டு அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வடக்குப்பட்டு அரசு உயா்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் பேச்சியம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டு விளையாடினா்.

இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வடக்குப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் வசந்தகுமாா் கலந்து கொண்டு, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா். இதையடுத்து, போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை பள்ளி மாணவா்கள் எடுத்துக் கொண்டனா். மேலும், பள்ளி வளாகத்தில் ஆசிரியா் அந்தோணிராஜ் தலைமையில் மூலிகைத் தோட்டம், காய்கறி தோட்டம் மற்றும் பூந்தோட்டம் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் லட்சுமிகாந்தன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் ஒடில்லா, பெற்றோா் ஆசிரியா் கழக பொருளாளா் பெருமாள், மாணவா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →