முகப்பு
காஞ்சிபுரம்

ஆக. 26-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் 26- ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

Updated On : 19 ஆகஸ்ட், 2022 at 1:09 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:36 PM

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் 26- ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்டரங்கில் வரும் 26- ஆம் தேதி காலை விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் நடைபெறும்.

கூட்டத்தில் பிரதமா் நுண்ணீா் பாசனத் திட்டத்தில் இணையவழியில் பதிவு செய்து கொள்ளவும், இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் செலுத்திக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.