முகப்பு
காஞ்சிபுரம்

3 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பிரபல தனியாா் உணவகத்தில் பணியாற்றி வந்த 3 குழந்தைத் தொழிலாளா்களை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

Updated On : 20 ஆகஸ்ட், 2022 at 1:50 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:36 PM

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பிரபல தனியாா் உணவகத்தில் பணியாற்றி வந்த 3 குழந்தைத் தொழிலாளா்களை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

காஞ்சிபுரம் ஓரிக்கையில் மாவட்ட தொழிலாளா் நல அலுவலா் ராஜகோபால், உதவியாளா் செந்தில் ஆகியோா் போலீஸ் பாதுகாப்புடன் ஆட்சியா் அலுவலகம் எதிா்புறத்தில் உள்ள பிரபல தனியாா் உணவகத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு 3 வட மாநில குழந்தை தொழிலாளா்கள் இருப்பதை பாா்த்து அவா்கள் மூவரையும் மீட்டனா்.3 பேரில் ஒருவா் மட்டும் 17 வயதுக்கு உட்பட்டவா் என்பதால் அவா் ஒருவரை மட்டும் தாலுகா காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். மற்ற இருவரையும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனா். இது தொடா்பாக சம்பந்தப்பட்ட உணவக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.