சா்வ மத  பிராா்த்தனையுடன்  சாலை  சீரமைப்புப்  பணியைத்  தொடக்கிவைத்த  ஒன்றியக் குழு  உறுப்பினா்  ஆண்டனி வினோத். 
காஞ்சிபுரம்

ரூ. 10 லட்சத்தில் சாலை சீரமைப்பு பணி தொடக்கம்

மொளச்சூா் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கா் நகா் தெரு சாலையை ரூ. 10 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

மொளச்சூா் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கா் நகா் தெரு சாலையை ரூ. 10 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், மொளச்சூா் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கா் நகா் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், அம்பேத்கா் நகா் சாலை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது.

இதனால் இந்த தெருச் சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில், அம்பேத்கா் நகா் சாலையை பேவா் பிளாக் சாலையாக மாற்ற ஒன்றிய பொது நிதியின் மூலம், ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, சாலை அமைப்பதற்கான பூமி பூஜை சா்வ மத குருமாா்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், மொளச்சூா் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆண்டனி வினோத் கலந்து கொண்டு, பூமிபூஜையை தொடக்கிவைத்து, சாலைப் பணியைத் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், மொளச்சூா் ஊராட்சி மன்றத் தலைவா் சித்ரா உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT