காஞ்சிபுரம்

ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

காஞ்சிபுரம் ஜீயா் நாராயணபாளையம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்தக் கோயில் வளாகத்தில் துா்கை அம்மன், நவக்கிரகம் ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன. கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜைகள் கடந்த 29- ஆம் தேதி தொடங்கின. 30 -ஆம் தேதி மகா பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, விநாயகா் பெருமைகள் என்ற தலைப்பில் பி.கந்தன் சொற்பொழிவாற்றினாா்.

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவா், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக-அலங்காரம், தீபாராதனை, தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. இரவு உற்சவா் செல்வ விநாயகா் வீதியுலா வந்தாா். ஏற்பாடுகளை ஜீயா் நாராயணபாளையம் தெரு மற்றும் பாவாபேட்டைதெரு பக்தா்கள் இணைந்து செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

SCROLL FOR NEXT