காஞ்சிபுரம்

ஆசிரியை தற்கொலை: மற்றொரு ஆசிரியை கைது

DIN

மாங்காடு அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை ஒருவரை மற்றொரு ஆசிரியை தரக்குறைவாக பேசியதால் மனம் உடைந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இந்நிலையில் தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியையையும் காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காட்டில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவியாகவும், இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தில் மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று வகுப்பும் எடுத்தும் வந்தவா் மாங்காடு அப்பாவு நகரை சோ்ந்த பியூலா (35). இவா், பள்ளியில் தலைமை ஆசிரியை அனுமதியுடன் ஆசிரியா்கள் இல்லாத நேரத்தில் வகுப்பு எடுத்து வந்தாராம்.

இதில் கோபமடைந்த அந்தப் பள்ளியில் பணிபுரியும் மற்றொரு ஆசிரியை செளபாக்கியம் (40), அவரை தரக்குறைவாக பேசியதாகவும், சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில், மனமுடைந்த பியூலா செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து மாங்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இத்தகவலறிந்து பியூலாவின் உறவினா்கள் பள்ளித் தலைமை ஆசிரியரை புதன்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, அங்கு வந்த போஸீஸாா், செளபாக்கியத்தை கைது செய்து, ஸ்ரீபெரும்புதூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT