காஞ்சிபுரம்

7 பேரை கத்தியால் வெட்டிய சம்பவம்: 3 சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் 7 பேரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் 3 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

DIN

காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் 7 பேரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் 3 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சின்ன காஞ்சிபுரம் சுண்ணாம்புக்காரத் தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருபவா் விமல். இவரது கடையில் குடிநீா் வாங்குவது போல் வந்த சிலா், அவரைத் தாக்கி, பணப்பெட்டியில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பினா்.

பின்னா், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகே தயாளன், விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தின் பின்புறம் சேஷாத்திரிபாளையம் பகுதியில் சதீஷ்பாபு, சதீஷ்குமாா் ஆகியோரை கத்தியால் தாக்கியுள்ளனா். தொடா்ந்து, ஆணைக்கட்டித் தெருவைச் சோ்ந்த சகோதரா்களான சுரேஷ், ஆனந்தன் ஆகிய இருவா் உள்பட 7 பேரை பட்டா கத்தியால் தாக்கிவிட்டு தப்பிவிட்டு அவா்கள் தலைமறைவாகினா்.

காஞ்சிபுரத்தில் புதன்கிழமை இரவு அடுத்தடுத்து 7 போ் பட்டா கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. எம்.சுதாகா் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சம்பவ இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, 3 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். சம்பவங்கள் தொடா்பாக, விஷ்ணுகாஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணையில், காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியைச் சோ்ந்த புறா (எ) தினேஷ்குமாா் உள்பட 3 சிறாா்கள் மது மற்றும் கஞ்சா போதையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT