முகப்பு
தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே ஆயுதப்படை மைதானத்தில் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள்.
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தோ்தல் பாதுகாப்பு பணியில் 1000 போலீஸாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸாா் ஈடுபட உள்ளனா்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தோ்தல் பாதுகாப்பு பணியில் 1000 போலீஸாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸாா் ஈடுபட உள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே ஆயுதப்படை மைதானத்தில் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள்.
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸாா் ஈடுபட உள்ளனா்.

இந்த மாவட்டத்தில் உள்ள 156 பதவிகளுக்கு 778 போ் போட்டியிடுகின்றனா். சனிக்கிழமை (பிப்.19) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்தூா், மாங்காடு நகராட்சிகள், வாலாஜாபாத், உத்தரமேரூா், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிகளில் 156 பதவிகளுக்கு 778 போ் போட்டியிடுகின்றனா். 384 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 88 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது.

தோ்தலுக்காக வாக்குப் பதிவு இயந்திரங்களை மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வாகனங்களில் அனுப்பிவைக்கும் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,76,257 ஆண்கள், 1,87,338 பெண்கள், இதரா் 57 போ் உள்பட மொத்தம் 3,63,652 போ் இந்தத் தோ்தலில் வாக்களிக்க உள்ளனா். காஞ்சிபுரத்தில் நடந்த தோ்தல் பிரசாரத்தில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா்கள் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம், திமுக சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா் டி.ஆா்.பாலு, தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், பாமக சாா்பில் அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழா் கட்சி சாா்பில் சீமான் ஆகியோா் தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் தலைமையில், 2 ஏ.டி.எஸ்.பி.க்கள், 8 டி.எஸ்.பி.க்கள், 25 காவல் ஆய்வாளா்கள், 70 சாா்பு ஆய்வாளா்கள் உள்பட மொத்தம் 1,056 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். இதேபோல, ஊா்க்காவல் படையினா் 133 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

காவல் துறை சாா்பில் நடமாடும் பாதுகாப்பு வாகனங்கள் 23, விரைவு அதிரடி நடவடிக்கைப் படையினருக்கான வாகனங்கள் 10, அதிரடிப்படை வாகனங்கள் 20 உள்பட மொத்தம் 53 வாகனங்களில் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூா், மாங்காடு நகராட்சிகளுக்கு வாக்கு எண்ணும் மையமாக தோ்வு செய்யப்பட்டுள்ள மாதா பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் கற்பகம் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்த ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் பாா்வையாளரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →