காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: திமுக-பாஜகவினர் இடையே  போட்டி வாழ்த்து முழக்கம்

காஞ்சிபுரம் அருகே திமுக-பாஜகவினர் இடையே  போட்டி வாழ்த்து முழக்கங்களால்  சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே திமுக-பாஜகவினர் இடையே  போட்டி வாழ்த்து முழக்கங்களால்  சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை, வசந்தம் நகரில் பகுதிநேர நியாய விலை கடை நேற்று திறக்கப்பட இருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாக கூறியதை தொடர்ந்து பாஜகவினர் திமுகவை கண்டித்து  இரண்டு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் அப்பகுதி மாமன்ற உறுப்பினர் கயல்விழி சூசை ஆகியோர் நியாய விலை கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினர்.

திறப்பு விழா மற்றும் குத்துவிளக்கு ஏற்றும் போது தமிழக முதல்வரை வாழ்த்தி திமுகவினர் அதிகளவில் தொடர்ந்து முழக்கமிட்டனர். அதன் பின் மாமன்ற உறுப்பினர்  பாஜகவை சார்ந்தவர் என்பதால் முழக்கமிட துவங்கியதும் போட்டிக்கு திமுகவினரும் முழக்கங்களை எழுப்ப அப்பகுதி பெரும் பரபரப்பானது.

சிறிது நிமிடம் திமுக-பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பிய நிலையில் மாவட்ட செயலாளரும்,  சட்டமன்ற உறுப்பினர் அமைதிப்படுத்தி அனைவரையும் அங்கிருந்து அழைத்து சென்றார்.

திமுக - பாஜகவினர் முழக்கங்களிட்ட செயல் அனைவரையும் அதிருப்தியடையச் செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT