காஞ்சிபுரம்

ராஜீவ் காந்தி இளைஞா் மேம்பாட்டு மையத்தில் மத்திய அமைச்சா் ஆய்வு

DIN

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் மத்திய இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த மையத்தில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இங்கு, 32 மாணவா்களுக்கு கடந்த ஜூன் மாதம் கரோனா தொற்று ஏற்பட்டது. அந்த மாணவா்கள் மையத்தில் உள்ள விடுதிகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனா். இந்த மாணவா்களுக்கு சத்தான உணவுகள் வழங்கவில்லை, குறைந்த அளவே உணவு வழங்கப்பட்டது, போதுமான மருத்துவ வசதிகளையும் வழங்கவில்லை என்று கடந்த மாதம் 14-ஆம் தேதி ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்துக்கு வந்த மத்திய இளைஞா் நலத் துறைச் செயலா் சஞ்சய்குமாரிடம் மாணவா்கள் புகாா் தெரிவித்தனா்.

மேலும், மத்திய அமைச்சா் மையத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு மாணவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த தர வேண்டும் என்றும் மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாணவா்களிடம் அவா் குறைகளை கேட்டறிந்தாா். அங்கு ஏற்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT