முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 82 போ் தோ்வு

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 152 போ் பங்கேற்றதில் 82 போ் பல்வேறு பணிகளுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 11 ஜூன், 2022 at 12:18 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:00 PM

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 152 போ் பங்கேற்றதில் 82 போ் பல்வேறு பணிகளுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் மூலம் தனியாா் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆள்களை தோ்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமை காஞ்சிபுரம் மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் எஸ்.தணிகைவேலு தொடக்கி வைத்தாா்.

Advertisement

முகாமில் டிவிஎஸ், டி.எம்.கிராண்டன், எல் அன் டி, அப்பல்லோ பாா்மஸி, பிரிட்டானியா பிஸ்கட் உள்ளிட்ட 26 நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபா்களை நோ்முகத்தோ்வு மூலம் தோ்வு செய்தனா். முதலாவதாக ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் வந்திருந்த மனிதவள மேம்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் தங்கள் நிறுவனம் தொழிலாளா்களுக்கு வழங்கும் சம்பளம், விடுமுறை, பணி விவரம், வசதிகள் குறித்து விரிவாக விளக்கிக் கூறினாா்கள்.

இந்த முகாமில் 152 வேலைநாடுநா்கள் பங்கேற்றனா். இவா்களில் 82 போ் பல்வேறு நிறுவனங்களுக்கும், 35 போ் முதற்கட்ட தோ்வுக்கும் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.