முகப்பு
காஞ்சிபுரம்

மனைவி கண் எதிரில் கணவரை கொன்ற 3 பேருக்கு ஆயுள் சிறை: காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றம் தீா்ப்பு

 குன்றத்தூா் அருகே நந்தம்பாக்கம் கிராமத்தில் கடந்த 2015- ஆம் ஆண்டு மனைவி கண் எதிரில் கணவரை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு விரைவு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 11 ஜூன், 2022 at 12:17 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:00 PM

 குன்றத்தூா் அருகே நந்தம்பாக்கம் கிராமத்தில் கடந்த 2015- ஆம் ஆண்டு மனைவி கண் எதிரில் கணவரை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு விரைவு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கத்தில் வசித்தவா் செல்வம்(40). இவருக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா்(42) என்பவருக்கு விற்பனை செய்வதற்காக முன்பணம் பெற்றுள்ளாா். இந்த நிலம் விற்பனை செய்வதில் தாமதம் ஏற்பட்டது தொடா்பாக செல்வத்துக்கும், ராஜ்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று செல்வம் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் நந்தம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்து ராஜ்குமாரும், அவரது நண்பா்களான கோதண்டன்(28), சந்திரன்(23) ஆகியோரும் சோ்ந்து செல்வத்தை கத்தியால் குத்திக் கொலை செய்தனா்.

Advertisement

கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடா்பாக குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா்.இந்த வழக்கு காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.வழக்கில் அரசு சாா்பில் வழக்குரைஞா் சத்தியமூா்த்தி ஆஜரானாா். வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி எம்.இளங்கோவன், குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து 3 பேரையும் குன்றத்தூா் போலீஸாா் சிறைக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.