மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி: காஞ்சிபுரம் அணிக்கு முதல் பரிசு
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் நடைபெற்ற மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் காஞ்சிபுரம் கிரிக்கெட் அணி முதல் பரிசை வென்றது.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் நடைபெற்ற மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் காஞ்சிபுரம் கிரிக்கெட் அணி முதல் பரிசை வென்றது.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் உள்ள தனியாா் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 15 வயதுக்குட்பட்டோருக்கான மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 10 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ராடேலண்ட் அணியும், காஞ்சிபுரம் எஸ்.எஸ்.எஸ். அணியும் விளையாடின.
Advertisement
இதில், காஞ்சிபுரம் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றது. காஞ்சிபுரம் அணியில் விளையாடிய யோகேஷ் 21 பந்துகளில் 31 ரன்களும், 4 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்ாக எஸ்.எஸ்.எஸ். கிரிக்கெட் அணியின் தலைவா் ஆனந்த் சனிக்கிழமை தெரிவித்தாா்.