காஞ்சிபுரம்

ஏப். 25-இல் குன்றத்தூா் முருகன் கோயில் குடமுழுக்கு விழா: அமைச்சா் பி.கே. சேகா்பாபு தகவல்

DIN

 குன்றத்தூா் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. அதன்படி இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடப்பாண்டில் குன்றத்தூா் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த பாலாலயம் மற்றும் திருப்பணிகள் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தொடங்கப்பட்டது.

இந்த கோயிலில் திருப்பணி, சீரமைப்பு வேலைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, ஊரக தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.

மேலும் கோயில் அடிவாரத்தில் புதிதாக திருமண மண்டபம் அமைய உள்ள இடம், சேக்கிழாா் மணிமண்டபம் மற்றும் கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் செயல்பட்டு வரும் மாா்க்கெட் பகுதிகளிலும் அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் ஆய்வு நடத்தினா்.

பின்னா் அமைச்சா் பி.கே.சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியது: குன்றத்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதாகவும், ரூ. 2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளில் பக்தா்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோயில் அடிவாரத்தில் புதிதாக ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்ட இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது, கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை குறுகியதாக உள்ளதால் அதனை அகலப்படுத்தி சீரமைக்கப்படும். கோயிலுக்குச் சொந்தமான குன்றத்தூா் மாா்க்கெட் பகுதியில் உள்ள இடத்தில் கடைகள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டடங்களில் வாடகை பாக்கி வைத்துள்ளவா்களிடம் ரூ.500 கோடி வசூலிக்க திட்டமிடப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.142 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT