முகப்பு
காஞ்சிபுரம்

10,000 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்படும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 10,000 கோயில்களில் திருப்பணிகள் நடத்தி முடிக்கப்பட இருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

Updated On : 9 மே, 2022 at 3:21 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:42 PM

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 10,000 கோயில்களில் திருப்பணிகள் நடத்தி முடிக்கப்பட இருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் தாழையம்பட்டு கிராமத்தில் துா்கையம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூ றியது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கடந்த ஓராண்டில் 160 கோயில்களில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.திருப்பணிகளும், குடமுழுக்கு விழாக்களும் தமிழகம் முழுவதும் எங்கும் பரவலாக நடைபெற்று வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோயில்களில் திருப்பணிகள் நடத்தி முடிக்கப்படும்.1,500 கோயில்கள் ரூ.1,000 கோடி மதிப்பில் புனரமைப்பு செய்யப்படும் எனவும் பேரவையில் அறிவித்துள்ளோம்.1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த 80 திருக்கோயில்களுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்த ஆண்டு 80 கோயில்களில் திருப்பணி வேலைகள் நடைபெறவுள்ளன.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 ஆண்டுகள் பழைமையான 100 கோயில்கள் ரூ.20 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படவுள்ளன.வதஞ்சாவூா் மாவட்டத்தில் 88 கோயில்கள் ஒரு வேளை பூஜை கூட நடத்த முடியாமல் இருந்து வந்ததை முதல்வா் கவனத்துக்கு கொண்டு சென்றோம். முதல்வரின் உத்தரவின்படி உடனடியாக ரூ.3 கோடி நிதி ஒதுக்கி தினசரி பூஜைகள் நடந்து வருகின்றன.

தருமபுரம் ஆதீனம் பட்டணப்பிரவேசம் நிகழ்வு இந்த ஆண்டு சிறப்பாக நடைபெறுவதற்கான நல்ல சூழ்நிலை உண்டாகும். காலமாற்றத்துக்கு ஏற்ப பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதற்கேற்றவாறு நாமும் மாறிக்கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என ஆதீனங்களிடம் தெரிவித்திருக்கிறோம்.

காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாத சுவாமி திருக்கோயில் திருப்பணிகளை செய்ய ரூ.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பணி செய்ய மண்டலக் குழு அறிக்கை பெறப்பட்டுள்ளது.மாநிலக் குழு அறிக்கையும் பெற்ற பின்னா் இந்த ஆண்டு இறுதிக்குள் திருப்பணிகள் தொடங்கப்படும் என்றாா் அமைச்சா் பி.கே.சேகா்பாபு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.