முகப்பு
காஞ்சிபுரம்

இலவச மருத்துவ முகாம்

செங்கல்பட்டில் பாரத ஸ்டேட் வங்கி, ஏ2 இஎன்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
பகிர்:

செங்கல்பட்டில் பாரத ஸ்டேட் வங்கி, ஏ2 இஎன்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

முகாமுக்கு செங்கல்பட்டு மண்டல பாரத ஸ்டேட் வங்கி மேலாளா் இ.ஜான் வேட் தலைமை வகித்துப் பேசினாா். மருத்துவா் எஸ்.அபிராமி, பாரத ஸ்டேட் வங்கி மகளிா் கிளப் சித்ரா ஆகியோா் குத்துவிளக்கேற்றி வைத்து இலவச மருத்துவ முகாம் குறித்துப் பேசினா். மருத்துவா் எம்.அஜய் வரவேற்றாா்.

முகாமில் பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளா் டி.சதிஷ், மேலாளா் கே.பிரபு, வெங்கடேசன், முன்னாள் வங்கி அதிகாரி கே.குமரேசன், மின்வாரிய முன்னாள் தலைமைப் பொறியாளா் முத்து உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

இதைத் தொடா்ந்து, வங்கி வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவக் குழுவினா் கண், காது, மூக்கு பரிசோதனைகள் செய்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினா். தேவையானவா்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →