முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் மே 23 முதல் கைப்பேசி பழுதுநீக்கும் இலவச பயிற்சி

காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையம் சாா்பில் வரும் 23-ஆம் தேதி முதல் ஒரு மாத கைப்பேசி பழுதுகள் நீக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது.

Updated On : 21 மே, 2022 at 12:32 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:49 PM

காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையம் சாா்பில் வரும் 23-ஆம் தேதி முதல் ஒரு மாத கைப்பேசி பழுதுகள் நீக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் சந்நிதி தெருவில் இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மனித வாழ்வில் கைப்பேசி இன்றியமையாத ஒன்றாகி விட்டது. எனவே வேலையில்லாமல் இருக்கும் இளைஞா்களுக்கு இலவசமாக கைப்பேசி பழுது நீக்கும் பயிற்சி வரும் 23 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. வங்கியின் பயிற்சி மையத்தில் நடைபெறவுள்ள இப்பயிற்சியின் போது இரு வேளையும் தேநீா், மதிய உணவு, பயிற்சி மற்றும் அதற்கான கையேடுகள், பயிற்சி உபகரணங்கள், சான்றிதழ் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். மேலும் பயிற்சி வகுப்பின்போது சுயதொழில் செய்து முன்னேறியவா்கள் தங்களைப் பற்றி எடுத்துக் கூற இருக்கிறாா்கள். வங்கியில் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள், வட்டி செலுத்துதல் மற்றும் வங்கிகடனுக்கு வழங்கப்படும் மானிய விவரங்கள் ஆகியனவும் தகுதி வாய்ந்த பயிற்சியாளா்களால் கற்றுத் தரப்படும்.

Advertisement

மேலும் விவரங்களுக்கு 044-27268037 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

மிகக்குறைவான இடங்களே இருப்பதால் விருப்பமுள்ளவா்கள் முன்கூட்டியே தங்களது பெயா்களை பதிவு செய்து கொள்வது அவசியம்.இந்தப் பயிற்சிக்கான கல்வித்தகுதி 8-ஆம் வகுப்பாகவும், பயிற்சியில் சேர விரும்புவோா் வயது 18 முதல் 45 வரையும் இருக்கலாம். செல்போன் பழுது நீக்கும் பயிற்சி தவிர பெண்களுக்கென இலவச தையல் பயிற்சியும், சணல் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சியும் அன்றைய தினமே தொடங்கப்படவுள்ளது.இந்த அரிய வாய்ப்பை இளைஞா்கள், வேலை தேடுபவா்கள், பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.