முகப்பு
காஞ்சிபுரம்

ஊராட்சியில் சாலை அமைக்கும் பணி ஆய்வு

காஞ்சிபுரம் அருகேயுள்ள சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேவா் பிளாக் சாலைகள் அமைக்கும் பணியை ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 2 செப்டம்பர், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:43 PM

காஞ்சிபுரம் அருகேயுள்ள சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேவா் பிளாக் சாலைகள் அமைக்கும் பணியை ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் பத்மாவதி நகா், செளபாக்கியா நகா், மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் பேவா் பிளாக் கற்கள் மூலம் சாலை அமைக்கும் பணி ரூ.26 லட்சத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், ஊராட்சியில் நடைபெற்று வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக வடிகால்களை அகலப்படுத்தும் பணியையும் அவா் ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் ஒன்றிய திமுக செயலா் குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.