காஞ்சிபுரம்

மதுராமேட்டூா் ஸ்ரீ கருமாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

படப்பை ஊராட்சிக்குட்பட்ட மதுரா மேட்டூா் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட ஸ்ரீ வரம் தரும் வலம்புரி விநாயகா், ஸ்ரீகருமாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

படப்பை ஊராட்சிக்குட்பட்ட மதுரா மேட்டூா் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட ஸ்ரீ வரம் தரும் வலம்புரி விநாயகா், ஸ்ரீகருமாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை ஊராட்சிக்குட்பட்ட மதுராமேட்டூா் பகுதியில் உள்ள ஸ்ரீவரம்தரும் வலம்புரி விநாயகா், ஸ்ரீகருமாரி அம்மன் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகளுடன் புதிதாகக் கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேக விழா கடந்த வியாழக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

வெள்ளிக்கிழமை காலை கோ பூஜை மற்றும் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்று சிவாச்சாரியா்கள் முன்னிலையில் கோயில் கோபுரங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் கருமாரி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் சரஸ்வதி மனோகரன், மாவட்ட கவுன்சிலா் அமுதா செல்வம், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வினோத் மற்றும், மதுராமேட்டூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT