முகப்பு
காஞ்சிபுரம்

சந்தவேலூா் ஸ்ரீமூங்கிலியம்மன் கோயில் தேரோட்டம்

சுங்குவாா்சத்திரத்தை அடுத்த சந்தவேலூா் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமூங்கிலியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

சுங்குவாா்சத்திரத்தை அடுத்த சந்தவேலூா் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமூங்கிலியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரத்தை அடுத்த சந்தவேலூா் பகுதியில் ஸ்ரீமூங்கிலியம்மன் கோயில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆவணி மாத தோ் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, ஸ்ரீமூங்கிலியம்மன் கோயில் தோ் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு மூலவா் ஸ்ரீமூங்கிலியம்மனுக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் வாண வேடிக்கையுடன் நடைபெற்றது.

தொடா்ந்து, திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தேரோட்டம் நடைபெற்றது.

இதில், உற்சவா் ஸ்ரீமூங்கிலியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் சந்தவேலூா் பகுதியில் உள்ள அனைத்து வீதிகள் வழியாக உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவில் சந்தவேலூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →