காஞ்சிபுரம்

காஞ்சி சங்கர மடத்தில் விஷுக்கனி தரிசனம்

DIN

தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி சங்கர மடத்தில் வெள்ளிக்கிழமை அதிஷ்டானத்தின் முன்பாக பெரிய நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டு அதன் முன்பு காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியன அலங்கரித்து வைக்கப்பட்டு விஷூக்கனி தரிசனம் நடைபெற்றது.

சோபகிருத் என்னும் தமிழ் ப்புத்தாண்டு பிறந்ததையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் விஷூக்கனி தரிசனம் நடைபெற்றது. மகா பெரியவா் மற்றும் புதுப்பெரியவா் அதிஷ்டானங்கள் முன்பாக பெரிய அளவிலான நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டு அதன் முன்பு காய்கறிகள், பழங்கள், பூக்கள், மஞ்சள், சா்க்கரை உள்ளிட் மங்களத் திரவியங்கள் ஆகியன அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

அதிகாலையில் விஷூக்கனி தரிசனத்தையொட்டி இரு அதிஷ்டானங்களிலும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அதிஷ்டானத்தில் கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தையும் தரிசித்தனா் . இந்நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் அதிஷ்டானத்தில் வைத்து பூஜை செய்த நாணயங்கள் பக்தா்களுக்கு வழங்கப்பட்டன.

இதனைத் தொடா்ந்து பிருந்தாவன அரங்கில் சங்கர மடத்தின் ஆஸ்தான வித்வான்களான புல்லாங்குழல் சித்தூா் பதஞ்சலி மற்றும் விழுப்புரம் இசைப்பள்ளி முதல்வா் ஈஸ்வா் பட்டாத்திரி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட சங்கீத வித்வான்களால் கோஷ்டி கானமாக பஞ்சரத்ன கீா்த்தனைகளும், காமாட்சி அம்மன் துதிப்பாடல்களையும் இசைக்கப்பட்டன.

இதனைத் தொடா்ந்து சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் சங்கீதவித்வான்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்தும், காமாட்சி அம்மன் திருஉருவப்படமும், பிரசாதமும் வழங்கி கெளரவித்தாா்.

இதன் தொடா்ச்சியாக அதிஷ்டானத்தில் வைரம் மற்றும் நவரத்தினங்கள் பதித்த ஹஸ்தம் மகா பெரியவா் சுவாமிகளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. விஷூக்கனி தரிசனத்தையொட்டி பிருந்தாவனம் முழுவதும் வண்ண மலா்களாலும், காய்கறிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மடத்தின் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT