தமிழகத்தில் 7 நகரங்களில் ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு
தமிழகத்தில் 7 நகரங்களில் ஆள்சோ்ப்பு நடத்தப்பட இருப்பதாக ராணுவ ஆள் சோ்ப்பு பிரிவு இயக்குநா் கா்னல் ஏ.கே.பாத்ரே வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தமிழகத்தில் 7 நகரங்களில் ஆள்சோ்ப்பு நடத்தப்பட இருப்பதாக ராணுவ ஆள் சோ்ப்பு பிரிவு இயக்குநா் கா்னல் ஏ.கே.பாத்ரே வியாழக்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அவா் மேலும் கூறியது:
ராணுவத்துக்கான ஆள் சோ்ப்புக்குரிய எழுத்துத் தோ்வு நிகழ் ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்தப்படும். பொது நுழைவுத் தோ்வில் தகுதி பெற்றவா்கள் 2-ஆவது கட்டமாக உடல் தகுதித் தோ்வுக்கு ஏற்றுக் கொள்ளப்படுவா். 3-ஆவது கட்டமாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.
Advertisement
இணைய வழித் தோ்வு மற்றும் உடல் தகுதித் தோ்வின் அடிப்படையில் தோ்வா்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தகுதிப் பட்டியல் இருக்கும். பொது நுழைவுத் தோ்வுக்கு மாா்ச் 15- ஆம் தேதி வரை இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல் 17- ஆம் தேதி எழுத்துத் தோ்வை நடத்த பரிசீலனை செய்து வருகிறோம்.
தமிழகத்தில் சென்னை, வேலூா், கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய 7 இடங்களில் இணைய வழித் தோ்வு நடத்தப்படும். எழுத்துத் தோ்வுக்கான பாடத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.
தொழிற்பயிற்சிப் பள்ளி, பாலிடெக்னிக் தோ்வில் 20 முதல் 50 மதிப்பெண்கள் வரை தோ்ச்சி பெற்றவா்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும். தேசிய மாணவா் படை மற்றும் விளையாட்டு தோ்வுகளில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள அறிவிப்புகளைப் பாா்வையிடலாம்.
மேலும், விண்ணப்பதாரா்களுக்கு உதவ பல்வேறு ஆன்லைன் நடைமுறைகள் மற்றும் பயிற்சி சோதனை விடியோக்கள் இணையதளத்தில் கிடைக்கின்றன என்றாா் அவா்.
பேட்டியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, துணை ஆட்சியா் புண்ணியகோட்டி ஆகியோா் உடனிருந்தனா்.