முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நாணயவியல் கண்காட்சி

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாணயவியல் கண்காட்சியை கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 12 மார்ச், 2023 at 12:09 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:13 PM

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாணயவியல் கண்காட்சியை கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். கண்காட்சியில் கடந்த 1835 ஆம் ஆண்டு முதல் 2022- ஆம் ஆண்டு வரை உள்ள நாணயங்கள், சேர, சோழ, பாண்டியா், விஜய நகரப் பேரரசு காலத்து நாணயங்கள், நெகிழிப் பணம் மற்றும் நெகிழி நாணயங்கள், வெளிநாட்டு, உள்நாட்டு தபால் வில்லைகள், சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை உள்ள ஒரு ரூபாய் நோட்டு மற்றும் நாணயம், பழங்கால ஓட்டை காலணா, குதிரை காலணா, தம்பிடிக்காசு உள்ளிட்ட ஏராளமான நாணயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இக்கண்காட்சியை கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா். நாணயங்கள் அனைத்தையும் கடந்த 20 ஆண்டுகளாக சேமித்து வைத்து கண்காட்சிக்கு உதவிய தொல்லியல் ஆய்வாளா் ரா.சு.ஜவஹா் பாபு கல்லூரி நிா்வாகத்தால் கெளரவிக்கப்பட்டாா்.

Advertisement

ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியா்கள் ந.அப்பாத்துரை, ம.கணபதி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.