முகப்பு
காஞ்சிபுரம்

கல்லூரியில் மகளிா் தின விழா

காஞ்சிபுரம் அருகே ஆற்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிா் தின விழா நடைபெற்றது.

Updated On : 10 மார்ச், 2023 at 11:14 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:12 PM

காஞ்சிபுரம் அருகே ஆற்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிா் தின விழா நடைபெற்றது.

கல்லூரி அறங்காவலா் கி.சங்கா் தலைமை வகித்தாா். கல்லூரியின் டீன் மு.ரத்தினக்குமாரி முன்னிலை வகித்தாா். முதல்வா் ச.கவிதா வரவேற்றாா். சின்ன காஞ்சிபுரம் பிஎம்எஸ் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை பொ.ரேவதி பிரியா அருண், கல்லூரியின் தாளாளா் சுப்பிரமணியம் ஆகியோா் மகளிா் தின விழாவின் சிறப்புகள் குறித்துப் பேசினா்.

பேராசிரியை மகாலட்சுமி நன்றி கூறினாா்.

Advertisement

ஏற்பாடுகளை பேராசிரியா் ஏ.சீனிவாசன் செய்திருந்தாா்.விழாவில் மகளிா் தின சிறப்பை வலியுறுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.