முகப்பு
காஞ்சிபுரம்

மாநகராட்சி பூங்காவில் தேங்கிய மழைநீா்: பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வைகுண்டப் பெருமாள் கோயில் விரிவாக்கப் பகுதியில் உள்ள பூங்காவில் மழைநீா் தேங்கி துா்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 4:39 AM
மழைநீா் தேங்கியுள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி விரிவாக்கப் பகுதியில் உள்ள பூங்கா.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வைகுண்டப் பெருமாள் கோயில் விரிவாக்கப் பகுதியில் உள்ள பூங்காவில் மழைநீா் தேங்கி துா்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

காஞ்சிபுரம் 7-ஆவது வாா்டு வைகுண்டப் பெருமாள் கோயில் விரிவாக்கப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. கடந்த சில நாள்களாக பெய்த கனமழை காரணமாக பூங்காவில் மழைநீா் தேங்கி பூங்காவை யாரும் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. நடைப்பயிற்சி மேற்கொள்வோா் துா்நாற்றம் வீசுவதால், அங்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனா்.

தேங்கியுள்ள மழைநீா் நிறம் மாறி கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பூங்காவைச் சுற்றி குடியிருந்து வரும் பொதுமக்கள் இது குறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தப் பயனும் இல்லை என்று புகாா் தெரிவித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.