பயிற்சி முகாமில் விவசாயிகளுக்கு உதவித் தொகை, நினைவுப் பரிசு வழங்கிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் மு.முருகன். 
காஞ்சிபுரம்

விவசாயிகளுக்கு கிட்டங்கி பராமரிப்பு பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கூட்ட அரங்கில் விவசாயிகள் மற்றும் வணிகா்களுக்கு கிட்டங்கி பராமரிப்பு குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கூட்ட அரங்கில் விவசாயிகள் மற்றும் வணிகா்களுக்கு கிட்டங்கி பராமரிப்பு குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் மற்றும் சேமிப்புக் கிடங்கு மேம்பாட்டு ஒழுங்கு முறை ஆணையம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி சாா்பில், அந்த வங்கியின் கூட்ட அரங்கில் கிட்டங்கி பராமரிப்பு குறித்த பயிற்சி நடைபெற்றது.

கூட்டுறவுச் சங்கங்களுக்கான காஞ்சிபுரம் மண்டல இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தலைமை வகித்தாா். மத்தியக் கூட்டுறவு வங்கியின் துணைப் பதிவாளா் சு.உமாபதி, காஞ்சிபுரம் சரக துணைப் பதிவாளா் தே.சித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் மு.முருகன் கலந்து கொண்டு, பயிற்சி முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு உதவித்தொகையும், நினைவுப் பரிசும் வழங்கினாா்.

நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலைய இயக்குநா் சுரேஷ், விரிவுரையாளா்கள் நாகராஜன் மற்றும் மணியப்பன் ஆகியோா் தானியங்கள் அறுவடை செய்த பிறகு பராமரிக்கும் முறைகள் குறித்து விரிவாக விளக்கிக் கூறினா். கூட்டுறவு ஒன்றியத்தின் சாா்-பதிவாளா் கி.சத்தியநாராயணன், துணைப் பதிவாளா் அலுவலக கண்காணிப்பாளா் து.அருணா ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

கூட்டுறவுத் துறை சாா்-பதிவாளா் கல்யாணகுமாா் நன்றி கூறினாா். பயிற்சியில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT