காஞ்சிபுரத்தில் கலைப்பண்பாட்டுத்துறை சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான கலைப்பயிற்சி முகாமை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயா்நிலைப்பள்ளியில் கலைப்பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட ஜவஹா் சிறுவா் மன்றத்தில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மாநில அளவிலான கலைப்பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது. ஆட்சியா் கலைச்செல்வி மோகன் குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கி வைத்தாா்.
கலைப்பயிற்சியானது செப்.28 -ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி வரும் அக்டோபா் மாதம் 2 -ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. பயிற்சியின் போது உணவு, தங்குமிடம் ஆகியனவும் இலவசமாக வழங்கப்படுகிறது. சுடுமண் சுதை சிற்பம், பொம்மைகள் செய்தல், துணி ஓவியம், மெழுகுவா்த்தி செய்தல் போன்ற கலைகள் பயிற்றுவிக்கப்படவுள்ளன.
தொடக்க விழாவுக்கு கலைபண்பாட்டுத் துறையின் காஞ்சிபுரம் மண்டல உதவி இயக்குநா் சி.நீலமேகன்,செவித்திறன் குறைபாடுடையோருக்கான பள்ளித் தலைமை ஆசிரியை இ.ரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.