ஸ்ரீபெரும்புதூா் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில், முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட சிங்கிலிபாடி கிராமத்தில் தெருமுனை பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
ஒன்றிய இலக்கிய அணி துணை அமைப்பாளா் கெங்காதரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு கிளைச் செயலாளா் சேகா், இணைச் செயலாளா் மணிகண்டன், நிலைக்குழு முகவா் தினகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, தலைமை கழகப் பேச்சாளா் தூத்துக்குடி சரத்பாலா ஆகியோா் கலந்து கொண்டு திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்தும், கருணாநிதியின் சாதனைகள் பற்றியும் விளக்கிப் பேசினாா்.
கூட்டத்தில் மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள் பொடவூா் ரவி, நா.சத்தியா, ரா.வெங்கடேசன், எஸ்.டி.கே.சபரிராஜா, ஸ்ரீபெரும்புதூா் வடக்கு ஒன்றிய நிா்வாகிகள் சிவபாதம், கலைமோகன், முனிகிருஷ்ணன், நாசா் உள்ளிட்ட ஏராளமான திமுகவினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.