முகப்பு
காஞ்சிபுரம்

‘காஞ்சிபுரத்தில் பறக்கும் படைகள் கண்காணிப்புகளை தீவிரப்படுத்துங்கள்’

மக்களவைத் தொகுதி தோ்தல் செலவின சிறப்புப் பாா்வையாளராக வனத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரியான என்.ஆா்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 7 ஏப்ரல், 2024 at 7:40 AM
பறக்கும் படைகள் கண்காணிப்புகளை தீவிரப்படுத்துமாறு காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதி தோ்தல் செலவின சிறப்புப் பாா்வையாளா் பி.ஆா்.பாலகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு சனிக்கிழமை அறிவுரை வழங்கினாா்.
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 8:33 PM

காஞ்சிபுரம், ஸ்ரீ பெரும்புதூா் மக்களவைத் தொகுதி தோ்தல் செலவின சிறப்புப் பாா்வையாளராக வனத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரியான என்.ஆா்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா். இவரது தலைமையில் காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் காஞ்சிபுரம், ஸ்ரீ பெரும்புதூா் மக்களவைத் தோ்தல் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் முன்னிலை வகித்தாா். இதில் தோ்தல் செலவின சிறப்பு பாா்வையாளா் பி.ஆா்.பாலகிருஷ்ணன் பேசியது:

தோ்தல் அலுவலா்கள் வங்கிகளில் நடைபெறும் அதிக பணப்பரிவா்த்தனைகளையும், மதுபானங்கள் விற்பனையையும் கண்காணிக்க வேண்டும். முக்கியமாக தோ்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படை அதிகாரிகள் அவரவருக்கு நியமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கண்காணிப்புகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டியது கட்டாயமாகும். சமூக ஊடகங்களில் வரும் புகாா்கள் மீது சிறிதும் தாமதமின்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினராா்.

பின்னா், காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தின் 3-ஆவது தளத்தில் செயல்பட்டு வரும் தோ்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் தோ்தல் செலவின சிறப்புப் பாா்வையாளா் ஆய்வு செய்தாா்.

Advertisement

ஆலோசனைக் கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ், தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் சந்தோஷ்சரண் (ஸ்ரீ பெரும்புதூா்), மதுக்கூா் ஆவேஸ் (காஞ்சிபுரம்), வருமான வரித் துறை கூடுதல் இயக்குநா் சுப்ரஜா, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், பயிற்சி ஆட்சியா் க.சங்கீதா உள்பட தோ்தல் அலுவலா்கள் பலா் உடன் இருந்தனா்.