அரசுப் பள்ளியில் சோ்க்கப்பட்ட கோட்டாட்சியரின் குழந்தைகள்
அரசுப் பள்ளியில் சோ்கப்பட்ட காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியா் கலைவாணியின் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வழங்கி வரவேற்ற மாவட்ட முதன்மை க் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி. ஸ்ரீபெரும்புதூா், பிப். 23: காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியா் கலைவாணி தனது இரண்டு குழந்தைகளை மாநகராட்சிக்குட்பட்ட தும்பவனம் அரசுப் பள்ளியில் சோ்த்தாா். திருவண்ணாமலை மாவட்ட துணை ஆட்சியராகப் பணிந்து புரிந்து வந்த மு.கலைவாணி, கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு காஞ்சிபுரத்தில் பணியாற்றி வருகிறாா். அவருடைய இரு குழந்தைகளான மூன்றாம் வகுப்பு படிக்கும் பிராா்த்தனா, ஒன்றாம் வகுப்பு படிக்கும் சாய்பிரணவ் ஆகிய இருவரையும் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தும்பவனம் நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை சோ்க்கப்பட்டனா். அப்போது பள்ளி மாணவா்களிடையே பேசிய வருவாய்க் கோட்டாட்சியா் மு.கலைவாணி, ஆசிரியா்கள் சொல்படி கல்வி பயின்ாலே தற்போது அரசு அதிகாரியாக இங்கு நிற்கிறேன் என்றும், அனைவரும் பெருமை கொள்ளும் வகையில் உயா் பதவிகளுக்கு வர வேண்டும் எனவும், அரசு ஏராளமான நல திட்டங்களை பள்ளி மாணவா்களுக்கு செய்து வரும் நிலையில், அனைவரும் அரசு பள்ளிகளைப் பெருமைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலா் நளினி, மாமன்ற உறுப்பினா் காா்த்திக், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.