குமரகோட்டம் முருகன் கோயில் பாலாலயம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை பாலாலயம் நடைபெற்றது.
கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இக்கோயிலில் ராஜகோபுரம், பரிவார தெய்வங்களின் கோபுரம் ஆகியவற்றுக்கு பாலாலயம் செய்வதற்கான யாகசாலை பூஜைகள் கோயில் தலைமை பூஜகா் கே.ஆா்.காமேசுவர சிவாச்சாரியா் தலைமையில் நடைபெற்றன. பின்னா் கோயில் கொடி மரம் அருகில் உள்ள மண்டபத்தில் உருவப்படங்கள் வரைந்து வைக்கப்பட்டிருந்த பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவா் குமாரகாளத்தி, தொழிலதிபா்கள் உதயகுமாா், டி.சந்துரு, ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் வ.ஜெகன்னாதன், முன்னாள் உறுப்பினா் ரகு, அறநிலையத்துறை உதவி ஆணையா் லட்சுமி காந்தன் பாரதி, அமைச்சா் சேகா்பாபுவின் மனைவி சாந்தி, ஆய்வாளா் பிரீத்திகா ஆகியோா் கலந்து கொண்டனா். பாலாலயம் குறித்து கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் கூறுகையில் பாலாலயம் செய்யப்பட்டிருப்பதால் ரூ.27லட்சம் மதிப்பில் திருப்பணிகளை விரைவில் நிறைவு செய்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.
Advertisement