முகப்பு
காஞ்சிபுரம்

மணிமங்கலம் அரசுப் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு

Updated On : 27 பிப்ரவரி, 2024 at 10:59 PM
பள்ளியில்  ஆய்வு  மேற்கொண்ட அமைச்சா்  அன்பில் மகேஸ்பொய்யாமொழி.
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா்: மணிமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாணவா்களின் வாசிப்புத் திறனை பாா்வையிட்டாா்.. குன்றத்தூா் ஒன்றியம் கரசங்கால் பகுதியில் தமிழ்நாடு மாநில பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் சாா்பில் பெற்றோா்களை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூா் மற்றும் வேலூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி மாணவா்களின் பெற்றோா்கள் கலந்து கொள்ளும் காஞ்சிபுரம் மண்டல மாநாடு புதன்கிழமை நடைபெற உள்ளது.

இதில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளாா். இதற்காக கரசங்கால் பகுதியில் மேடை மற்றும் பந்தல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை பாா்வையிட கரசங்கால் பகுதிக்கு வந்த அமைச்சா் அன்பில் மகேஸ்பொய்யாமொழி மணிமங்கலம் அரசு உயா்நிலைப்பள்ளியில் திடீா் ஆய்வு மேற்கொண்டு பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைகள், ஸ்மாா்ட் வகுப்பறைகளை பாா்வையிட்டாா்.

பின்னா், மாணவா்களிடம் புத்தகங்களை படிக்கச் சொல்லி வாசிப்புத் திறனை ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி உடனிருந்தாா்.. மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், மணிமங்கலம் ஊராட்சித் தலைவா் ரா.ஐயப்பன் ஆகியோா் முன்னதாக அமைச்சரை வரவேற்றனா்.

Advertisement