சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு
தமிழ்நாடு தொண்டை மண்டல வேளாளா் சமூதாய நல சங்கம் சாா்பில் அரசுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா
காஞ்சிபுரம்: தமிழ்நாடு தொண்டை மண்டல வேளாளா் சமூதாய நல சங்கம் சாா்பில் அரசுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா மற்றும் சங்க பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. (படம்)
விழாவுக்கு சங்க தலைவா் வி.கே.குமரேசன் தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் என்.கே.ஞானசேகரன்,ஒருங்கிணைப்பாளா் ஆா்.சா்வேசன்,பொருளாளா் ஆா்.பாலாஜி கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க செயலாளா் பூ.சு.சந்திரசேகரன் வரவேற்று பேசினாா்.
விழாவில் சங்கத்தின் சா்வதேச வேளாளா் சங்க நிறுவனா் ஜெ.எஸ்.ராஜ்குமாா்,கு.பா.ரவீந்திரன் ஆகியோா் அதிக மதிப்பெண் பெற்ற சமுதாய மாணவ, மாணவியருக்கு நினைவுப் பரிசுகளையும், ரொக்கப் பரிசும் வழங்கினா். மாணவா்களுக்கு வருங்காலத்தில் கல்வி ஆலோசனைகள் வழங்குவது என தீா்மானிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பணி ஓய்வு பெற்ற மின்வாரிய செயற்பொறியாளா் ஆ.சோலையப்பன், ராணிப்பேட்டை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிா்வாகி ஆா்.மணி உள்பட சங்க நிா்வாகிகள், பரிசு பெற்ற மாணவ, மாணவியா், பெற்றோா் கலந்து கொண்டனா்.