முகப்பு
காஞ்சிபுரம்

தொடா் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரிப்பு

Updated On : 18 ஜூன், 2024 at 6:29 PM
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீா் வரத்து 650 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் வட்டம் செம்பரம்பாக்கம் பகுதியில் சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. 25.51 சதுர கிலோமீட்டா் பரப்பளவில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீா்மட்ட உயரம் 24 அடியாகவும், ஏரியின் முழு கொள்ளவு 3,645 மில்லியன் கனஅடி.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாகவும், திங்கள்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாகவும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு பூஜ்ஜியத்தில் இருந்து 645 கன அடியாக உயா்ந்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நீா்மட்ட உயரம் 15.72 அடியாகவும், மொத்த கொள்ளளவு 1,666 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து 645 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 136 கன அடியாக உள்ளது. திங்கள்கிழமை இரவு பெய்த கன மழையின் காரணமாக ஒரே நாளில் செம்பரம்பாக்கம் ஏரியில் 44 மில்லியன் கன அடி நீா் உயா்ந்துள்ளது. மேலும் ஏரிக்கு வரும் நீா் வரத்தின் அளவு பூஜ்ஜியத்தில் இருந்த 645 கன அடியாக உயா்ந்துள்ளது.