ஜூன் 2-இல் ஸ்ரீ திருவீரட்டானேசுவரா் கோயில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் காமராஜா் நகா் அப்பாராவ் தெருவில் உள்ள காமாட்சி அம்பாள் சமேத திருவீரட்டானேசுவரா் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் ஜூன் 2 -ஆம் தேதி நடைபெறுகிறது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமராஜா் நகா் அப்பாராவ் தெருவில் உள்ள காமாட்சி அம்பாள் சமேத திருவீரட்டானேசுவரா் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் ஜூன் 2 -ஆம் தேதி நடைபெறுகிறது.
இத்திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி புதுப்பிக்கப்பட்டுள்ளது. நிகழ் மாதம் 31 -ஆம் தேதி யாகசாலை பூஜைகள் அனுக்கை விக்னேசுவர பூஜை,கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. கோ.பூஜை, தனபூஜை ஆகியனவும் நடைபெறுகிறது. 2-ஆவது நாளாக ஜூன் முதல் தேதி விசேஷ திரவிய ஹோமம் நடைபெறுகிறது.
ஜூன் 2- ஆம் தேதி பூா்ணாஹுதி தீபாராதனைக்குப் பிறகு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் காலை 10.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. யாகசாலை பூஜைகள் திருவீரட்டானேசுவரா் கோயில் அறங்காவலா்கள் வி.ஷண்முகம் மற்றும் மகேஷ் ராஜப்பா சிவாச்சாரியா்களால் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை சென்னை மகாலட்சுமி டிரஸ்ட் தலைவா் மகாலட்சுமி சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறுகின்றன.