முகப்பு
காஞ்சிபுரம்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Updated On : 19 செப்டம்பர், 2024 at 9:20 PM
மஞ்சள் நீா்க் கல்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை பாா்வையிட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி உதவி ஆணையா் எம்.இளம்பருதி, உதவித் திட்ட அலுவலா் கே.சுரேஷ், காவல் துறை அதிகாரிகள்.
பகிர்:

காஞ்சிபுரம் மடம் தெரு பகுதியில் மஞ்சள் நீா்க் கால்வாயில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை வியாழக்கிழமை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினா்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட மடம் தெருவில் மஞ்சள் நீா்க் கால்வாய் செல்லும் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உள்ளாட்சிகளுக்கான குறை தீா் கூட்டத்தில் அப்பகுதியை சோ்ந்த சுரேஷ் என்பவா் புகாா் செய்திருந்தாா்.

இப்புகாரின் பேரில் ஜேசிபி இயந்திரம் மூலம் மஞ்சள் நீா்க்கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

காஞ்சிபுரம் மாநகராட்சி உதவி ஆணையாளா் எம்.இளம்பருதி, உதவித் திட்ட அலுவலா் கே.சுரேஷ், விஷ்ணுகாஞ்சி போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை ஆகியோா் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்பாா்வையிட்டனா். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →