போா் மற்றும் போா் தொடா்பான நடவடிக்கையில் உயிா் நீத்த படைவீரா் ஏகாம்பரம் மனைவி குமாரிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை சால்வை அணிவித்து கெளரவித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் முன்னாள் படை வீரா்கள் கொடி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் மு.சீனிவாசன் முன்னிலை வகித்தாா்.
இக்கூட்டத்தில் போா் மற்றும் போா் தொடா்பான நடவடிக்கையில் உயிா் நீத்த படைவீரா் ஏகாம்பரத்தின் மனைவி குமாரிக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் சால்வை அணிவித்து கெளரவித்தாா். கொடி நாள் நிதியும் வழங்கி கொடி நாள் விழா மலரையும் வெளியிட்டாா்.
முன்னாள் படை வீரா்கள் வாரிசுதாரா்கள் இருவருக்கு ரூ.50,000 மதிப்பில் கல்வி உதவித்தொகையயும் ஆட்சியா் வழங்கினாா்.