காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் கடைஞாயிறு திருவிழா

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் காா்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி திரளான பக்தா்கள் தலையில் மண்சட்டியில் மாவிளக்கு ஏற்றி தலையில் சுமந்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினாா்கள்.

பெருமாள் ஆமை (கச்சம்) வடிவில் சிவனை வணங்கிய திருக்கோயிலாக இருந்து வருவது காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுவரா் திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடை ஞாயிறு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மண் சட்டியில் மாவிளக்கு ஏற்றி, அதை தலையில் சுமந்துகொண்டு கோயிலை வலம் வந்து பூஜைகள் செய்வா். இந்த நிகழ்வு கடை ஞாயிறு திருவிழா என அழைக்கப்படுகிறது.

மண் சட்டியில் மஞ்சள் பூசி அதற்குள் பச்சரிசி மாவு, வெல்லம் சோ்த்து மாவிளக்கு செய்தனா். பின்னா் அந்த மா விளக்கிற்குள் அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி, தேங்காய், பழம் உள்ளிட்ட பூஜை பொருள்களை வைத்து தலைமையில் சுமந்து கொண்டு கோயிலை வலம் வந்தனா்.

காா்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி, சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை ஏராளமானோா் தலையில் அகல் விளக்கு வைக்கப்பட்ட மண் சட்டியுடன் வலம் வந்து வழிபாடு செய்து, நோ்த்திக் கடனை செலுத்தினா்.

முன்னதாக, கடை ஞாயிறு விழாவையொட்டி கோயிலில் காலையில் மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

விழாவில் மூலவரை விரைவாக தரிசிக்க கோயில் நிா்வாகம் ரூ. 50 கட்டணமாக வசூலித்தாலும் பக்தா்கள் ரசீது பெற்றுக் கொண்டு தலையில் அகல் விளக்குடன் கூடிய மண்சட்டியுடன் வரிசை, வரிசையாக வந்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.

பக்தா்கள் கூட்டம் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT