புனரமைக்கப்பட்ட குளம். 
காஞ்சிபுரம்

இருங்காட்டுக்கோட்டையில் இரு குளங்களை புனரமைத்த ஹூண்டாய் நிறுவனம்!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை கிராமத்தில் இரண்டு குளங்களை புனரமைத்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை கிராமத்தில் இரண்டு குளங்களை புனரமைத்துள்ளது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூகசேவைப் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை (HMIF) ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள இருங்காட்டுக்கோட்டை கிராமத்தில் இரண்டு குளங்களை மக்கள் பயன்பாட்டிற்கு புனரமைத்து வழங்கியது.

ரூ.2.63 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், குளங்களின் மொத்த கொள்திறனை 151 மில்லியன் லிட்டராக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான நீர் ஆதாரம் உறுதிசெய்யப்பட்டு, சுமார் 5,000 பொதுமக்கள் பயன்பெறுவர்.

இம்முயற்சி, இந்தியா முழுவதும், நீராதார பராமரிப்பு மற்றும் சுகாதாரமான நீர் பெறுவதை மேம்படுத்தும் HMIFன் முக்கியமானதொரு திட்டமான H2OPEன் ஒரு பகுதியாகும். நீர் கொள்ளளவைப் பெருக்குதல் மற்றும் மழைநீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதும் இத்திடத்தின் முக்கிய நோக்கமாகும்.

புனரமைப்புப் பணிகளில், குளங்களைச் சுத்தம் செய்து ஆழப்படுத்துதல், கரைகளைப் பலப்படுத்துதல், எளிதான பயன்பாட்டிற்கான படிகள் மற்றும் நடைபாதைகளை அமைத்தல், பாதுகாப்புக்காக சூரியஆற்றல் விளக்குகள் நிறுவுதல், பசுமைக்காக நாட்டு மரங்களை நடுதல் மற்றும் குளத்தை சுற்றுச்சுவர் கொண்டு பாதுகாத்தல் ஆகியவை அடங்கும்.

குளம் புனரமைக்கப்பட்டதற்கான சான்றிதழை, மாவட்ட அதிகாரிகளிடம் வழங்கிய ஹூண்டாய் நிறுவனம்

சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், இந்தத் திட்டத்தின் போது HMIF விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் தூய்மை முகாம்களையும் ஏற்பாடு செய்தது. இந்த செயல்பாடு கிராம பஞ்சாயத்தின் முழுமையான ஆதரவுடனும், மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடனும் செயல்படுத்தப்பட்டது.

HMIF அறங்காவலர்கள் சி.எஸ். கோபால கிருஷ்ணன் மற்றும் டி. சரவணன் ஆகியோர் இந்த புனரமைக்கப்பட்ட குளங்களை மாவட்ட அதிகாரிகள் மற்றும் கிராமபொது மக்கள் முன்னிலையில், கிராம பஞ்சாயத்து தலைவர் எஸ். சிவகுமார் மற்றும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் எஸ். செந்தில்ராஜன் ஆகியோரிடம் முறையாக ஒப்படைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளையின் அறங்காவலர் சி.எஸ். கோபால கிருஷ்ணன் பேசுகையில், “நீர் என்பது வாழ்வு மற்றும் நிலைத்த வளர்ச்சிக்கு அடித்தளம். எங்கள் H₂OPE திட்டத்தின் மூலம், நீரைப் பாதுகாப்பது மட்டுமின்றி, மக்களின் வாழ்வியலை மேம்படுத்த நீண்டகாலத் தீர்வுகளை அளிப்பதிலும் அக்கறை கொண்டுள்ளோம்.

நீர்நிலைகளைப் புனரமைத்தல், மற்றும் பள்ளிகளில் சுத்தமான குடிநீர் அமைப்புகளை நிறுவுவதன் மூலம், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலான ஹூண்டாயின் ‘மனிதகுலத்திற்கான முன்னேற்றம்’ என்ற உலகளாவிய தொலைநோக்குப் பார்வையை நாங்கள் வலுப்படுத்துகிறோம்,” என்றார்.

களத்தில், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பு வழங்கிய ஆதரவுடன், வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட இத் திட்டம், சமூகப் பங்கேற்பையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்தது.

இந்த திட்டம், நீரின் தரத்தை உயர்த்துவதன் மூலம்,SDG6 ஐயும், வானிலை மீளுருதியை உயர்த்துவதன் மூலம் SDG 13ஐயும் மற்றும் நிலைப்புத்தன்மையும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதன் மூலம் SDG 11ஐயும் அடுத்த நிலைக்கு முன்னேற்றுகிறது.

Hyundai Motor India Foundation has renovated two ponds in Irungattukottai village, Sriperumbudur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதலியுடன் நேரம் செலவிட விடுப்பு கேட்ட ஊழியர்! மேலதிகாரியின் பதில் என்ன தெரியுமா?

ரூ.1.6 லட்சம் கோடி இழப்புடன் வர்த்தகம் நிறைவு!

ரூ. 100 கோடி வசூல் இயக்குநருடன் இணையும் ஷண்முக பாண்டியன்?

”அஜாக்கிரதையாக இருந்தவர்கள்; குற்றம் செய்தவர்கள்!” அமைச்சர் அன்பில் மகேஸ்

டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல்! பெயர் இல்லாவிட்டால் என்ன செய்வது?

SCROLL FOR NEXT