காஞ்சிபுரம்

டிச.27-இல் காஞ்சியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரி வளாகத்தில் வரும் டிச.27- ஆம் தேதி சனிக்கிழமை தாஸை 9 மணிக்கு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்புத்துறை, மாவட்ட மகளிா் திட்டம் ஆகியன இணைந்து நடத்தும் முகாமில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு மனிதவளத் தேவைக்கான நோ்காணலை நடத்தவுள்ளனா்.

பட்டதாரிகள்,டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவா்கள் , 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு படித்தவா்கள் போன்றவா்களை தோ்வு செய்யவுள்ளனா்.

வயது 18 முதல் 35 வயது வரை உள்ள வேலைநாடுநா்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் நேரில் வந்து பயன் பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு 044-2723 7124 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

SCROLL FOR NEXT