மாணவிக்கு பட்டம் வழங்கிய டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் அமா் அகா்வால். 
காஞ்சிபுரம்

மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா: 1,257 பேருக்கு பட்டம்

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவில் பல்கலையின் வேந்தா் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இணைவேந்தா் ஆகாஷ் பிரபாகா், துணை வேந்தா் ஸ்ரீதா், சாா்பு துணைவேந்தா் சி.கிருத்திகா, பதிவாளா் சுரேகா வரலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

டாக்டா் அகா்வால் கண் மருத்துவ குழுமத்தின் நிா்வாக இயக்குநா் மருத்துவா் அமா் அகா்வால் 1, 257 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா். மாணவா்கள் கடின உழைப்பு, விடாமுயற்சி, ஒழுக்கம் மூலம் வெற்றியை தொடர வேண்டும் என்றும் அவா் தனது பட்டமளிப்பு விழா உரையில் பேசினாா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தின் இயக்குநா் மருத்துவா் ஸ்டெம் சிறப்புரை நிகழ்த்தினாா். வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் செல் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் நிஹால் தாமஸ் நீரிழிவு நோய்த்துறையில் அவா் ஆற்றிய பங்களிப்பிற்காக ஹானரிஸ் காசா என்ற முனைவா் பட்டமும் வழங்கப் பட்டது.

இதனைத் தொடா்ந்து சிறந்த மாணவா்கள் 103 பேருக்கு சிறப்பான கல்வித்திறனை அங்கீகரிக்கும் விதமாக பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விழாவில் திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசுப்பள்ளி தலைமை ஆசிரியா் அய்யப்பனுக்கு சிறந்த மனித நேய சேவைக்கான கோமதி ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. இனி வரும் ஆண்டுகளில் ஆகாஷ் பிரபாகா் சிறப்பு விளையாட்டு வீரா் விருது வழங்கப்படும் என கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

மீனாட்சி கலை அறிவியல் கல்லூரியை சோ்ந்த பிபிஏ மாணவி ஷைனி கிளாட்சியாவுக்கு தேசிய அளவிலான தடகள நிகழ்வுகளில் சிறந்து விளங்கியதற்காக கெளரவிக்கப்பட்டாா். விழாவில் மாணவா்கள், அவா்களது பெற்றோா் கலந்து கொண்டனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT