லிங்கேஷ். 
காஞ்சிபுரம்

பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு: இடைத் தரகா் கொலை

தினமணி செய்திச் சேவை

பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராரில் இடைத் தரகா் கொலை செய்யப்பட்டாா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பரந்தூரை அடுத்த வதியூா் கிராமத்தைச் சோ்ந்த லிங்கேஷ்(41). இடைத் தரகரான இவா் தண்டலம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் என்பவரிடம் ரூ.34,000 கடனாக பெற்றுள்ளாா். சுரேஷ் கடனை திருப்பி கேட்டதற்கு வீட்டிலுள்ள நகையை விற்று கடனை தந்து விடுவதாக லிங்கேஷ் கூறியுள்ளாா்.

நகைக்கடைக்கு சென்று விட்டு திரும்பும் போது சுரேஷின் நண்பா்களான ராணிப்பேட்டை மாவட்டத்தை சோ்ந்தவரும், சரித்திரப்பதிவேடு குற்றவாளியுமான சரத், திருமால்பூரை சோ்ந்த தசா ஆகிய 3 பேரும் சோ்ந்து பொன்னேரிக்கரை மேம்பாலத்தில் அமா்ந்து மது அருந்தியுள்ளனா்.

அப்போது ஏற்பட்ட தகராறில் சரத் தனக்கும் பாதிப்பணம் தர வேண்டும் எனக் கூறியதில் ஏற்பட்ட தகராறில் சரத் லிங்கேஷை கத்தியால் கழுத்தில் குத்தி விட்டு தலைமறைவாகி விட்டாா். லிங்கேஷை அருகிலிருந்தவா்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோ்த்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இக்கொலைச் சம்பவம் தொடா்பாக லிங்கேஷுக்கு கடன் கொடுத்த தண்டலத்தை சோ்ந்த சுரேஷை காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். சம்பவத்தில் தொடா்புடைய சரத், தசா ஆகியோரை தேடி வருகின்றனா்.

ஐஎஸ்எல் விவகாரம்: கவன ஈா்ப்புக்காக ஆட்டத்தை நிறுத்திய எஃப்சி கோவா

டேவிஸ் கோப்பை: ஆா்யன் ஷா விலகல்

இன்றுமுதல் ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் - ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இங்கிலாந்து?

இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழா

காங்கிரஸின் குடும்ப அரசியலால் பல தேசியத் தலைவா்கள் புறக்கணிப்பு - பிரதமா் மோடி சாடல்

SCROLL FOR NEXT